கல்லூரி காலங்களில் எழுதிய ஒன்று...
"ஏம்பா? மேம்பாலம் ஏறி இறங்கினா ரயில்வே ஸ்டேஷன். அதுக்கு போயி 30 ரூபா கேக்கறியே?" - வழக்கமாக பேசுவதை விட சற்று பலத்த குரலில் கேட்டான் முரளி.
"லக்கேஜ் எல்லாம் வச்சிருக்கே சார்.... முப்பது ரூபா ... போற வாடகை தான்.. ஏறுனா ஏறு சார்!" - ஆட்டோகாரர்களுக்கே உரித்தான தோரணையில் பதில்.
"லக்கேஜ்னு எதை சொல்றான்?" என்று நினைத்துக்கொண்டே, தன் கையில் உள்ள பெட்டி மீது ஒரு பார்வை வீசிவிட்டு, அருகில் நின்றிருந்த நளினியை பார்த்தான். நளினி சற்று குண்டாக தான் இருந்தாள். "லக்கேஜ்னு எதை சொல்றான்?"
"பரவாயில்லைங்க... என்னிக்கோ ஒரு நாள் தானே... ஏறுங்க..." - என்று முரளியின் பதிலுக்கு காத்திராமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள் நளினி.
"பத்து ருபாய் தண்டம்" என்று நினைத்துக்கொண்டே முரளி ஏறிஅமர்ந்த ரெண்டொரு நொடிகளில் ஆட்டோ மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் மேட்டுபாளையம்-சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் கோவை சந்திப்பு நிறுத்தத்தில் ஏறி நளினி ஜன்னல் ஓர இருக்கையிலும், முரளி அவள் அருகிலும் அமர்ந்தனர். ஜன்னல் அருகில் பத்து-பதினொன்று வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் பிரபல பத்திரிக்கைகளை சத்தம் போட்டு விற்றுக்கொண்டிருந்தான். ரயில் புறப்பட இன்னும் நிறைய நேரம் இருக்கவே, அந்த பையனை அழைத்து தனக்கு பிடித்தமான பத்திரிகை ஒன்றை வாங்கினாள் நளினி.
"அக்கா புக்கு ஆறு ரூபாக்கா... ஏழு ரூபா குடுங்கக்கா..." என்றான்.
அவனுக்கு பின்னால் ஒரு 40 அடி தூரத்தில் இருக்கும் ஒரு புத்தக கடையை நோட்டமிட்ட நளினி, "இந்தா இங்க இருக்கிற கடைல வாங்கினா ஆறு ருபாய், இதுக்கு நான் ஏன் உனக்கு ஏழு ரூபா தரனும்? ஆறு ரூபா தான் தருவேன்.." - என்று கண்டிப்புடன் கூறி விட்டு தன் பர்சில் இருந்து சில்லறைகளை எடுத்து கொடுத்தாள்.
ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அந்த பத்திரிக்கைகளின் பெயரை எல்லாம் கூவிக்கொண்டே நகர்ந்தான் அச்சிறுவன். முரளி வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான். பத்து அடி தூரத்தில் இருந்த பெஞ்சில் ஓர் மூன்று வயது குழந்தை உட்கார்ந்திருந்தது. நளினி பக்கங்களை புரட்ட ஆரம்பித்திருந்தாள். ஐந்து நிமிடங்கள் ஓடின, நளினியின் கண்கள் கலங்கின.
"என்ன ஆச்சு நளினி?"
"எங்க... இந்தா கதைய படிங்களேன்... ரொம்ப touching-ஆ இருக்கு...." - என்று அந்த ஒரு பக்க சிறுகதையை அவன் பக்கம் நீட்டினாள் நளினி.
"ம்ம்ம்.. நல்லாருக்கு..." - ஒரு ஏழை சிறுவனின் வாழ்க்கையில் ஓர் துயர சம்பவத்தை கருவாக்கி எழுதப்பட்ட கதையை படித்துவிட்டு சொன்னான் முரளி.
ஓர் குழந்தையின் அழுகுரல் கேட்டு மீண்டும் கவனத்தை ஜன்னல் வழியாக வெளியே அனுப்பி அழும் அந்த 'பெஞ்ச்' குழந்தையின் மீது பார்வையை பதித்தான். எங்கிருந்தோ ஓடி வந்த அந்த புத்தகம் விற்கும் பையன், அந்த குழந்தைக்கு விளையாட்டு காட்டிவிட்டு, தன் பாக்கெட்டில் இருந்து சாக்லேட் ஒன்றை எடுத்து, குழந்தை முகத்தில் சிரிப்பொன்றை கொடுத்துவிட்டு சென்றான் - மீண்டும் பத்திரிக்கைகள் விற்க.
எதிரில் காலியாக இருந்த சீட்டில் ஒரு தம்பதியினர் வந்து அமர்ந்தனர். நளினி அவர்களிடம் பேச்சை துவக்க, ரயில் சிநேகிதம் ஆரம்பம் ஆனது. ஜன்னல் வழியாக சைகை செய்து புத்தகம் விற்கும் சிறுவனை அழைத்தாள் எதிர் சீட் அம்மா.
"புக் ஏழு ரூபா-க்கா... எட்டு ரூபா கொடுங்க.." - அந்த பெண் கேட்ட பத்திரிக்கையை கொடுத்துவிட்டு கூறினான் அச்சிறுவன்.
"இதா இந்தா இருக்குங்க Book Stall... கொடுக்காதீங்க.." - சமூக சேவை உணர்வோடு நளினி எச்சரித்தாள். நளினி மீது அவன் வீசினால் கூட தப்பில்லாத அந்த 'முறை' யை எதிர்பார்த்து உன்னிப்பாக கவனித்தான் முரளி.
அவனோ, "இதோ, சில்லறை மாத்திட்டு வந்துட்றேன்க்கா .... " - என்று அருகில் இருந்த பழக்கடையில் சில்லறை மாத்தலானான்.
"தம்பி" - மிச்ச பணத்தை கொடுத்து திரும்பிய அவனை அழைத்து, தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து கொடுத்தான்.
"ஜு.வி யா சார்?" - சூட்டிப்புடன் சிறுவன்.
"இல்ல...."
"அப்புறம் சார்...?"
"சும்மா.. வச்சுக்கோ...."
"வேணாம் சார்... எதாவது புக் வாங்கிக்கோங்க..."
"தம்பி... நீ பண்றதெல்லாம் பாத்திட்டு தான் இருக்கேன்... உன் உழைப்புக்கு கிடைச்ச பரிசா வெச்சுக்கோ... இதே மாதிரி நம்பிக்கைய உழைச்சு பாரு... கண்டிப்பா பெரிய ஆளா வருவ..."
"ரொம்ப நன்றி சார்..." - பெரிய தயக்கத்தை தாண்டி அந்த பணத்தை வாங்கி கொண்டான். இஞ்சின் சத்தம் ரயில் புறப்பட ஆயத்தமாகி கொண்டிருப்பதை உணர்த்தியது.
"என்னங்க இது?" - குழப்பத்தில் நளினி.
"நீ படிச்சயே கதை... அது இதோ போறான் பாரு, அவன பத்தின கதை தான். இந்த வயசுலயும் திருடாம, பிச்சை எடுக்காம... சொந்த கால்ல நிக்கனும்னு நினைக்கறான். அவனையும் அவன் தங்கச்சியையும் கப்பாத்தறான். இவனுக்கு உழைப்பு மேல நம்பிக்கை போச்சுன்னா easy-ஆ திருடனா மாறிடுவான்... அந்த நம்பிக்கையை போகா விடக்கூடாது நளினி... கூடாது... அதான் பத்து ரூபா கொடுத்தேன்... நம்மால அவன கூட்டிட்டு போயி வேல குடுக்க முடுயாது... ஏதோ என்னால முடிஞ்சது... "
நளினி மெல்ல யோசிக்க ஆரம்பித்தாள். இரயில் மெல்ல நகர ஆரம்பித்தது.
"காலைல அநியாயம்னு தெரிஞ்சும்... ஆட்டோவுக்கு பத்து ருபாய் அதிகம் கொடுத்தோம்..... காரணம்? சோம்பேறித்தனம்... பஸ்ல போக கஷ்டம்... பத்து ருபாய் ஜாஸ்தியா கொடுத்து ஆட்டோல சொகுசா வந்தோமே, அத விட சந்தோஷம், நிம்மதி எனக்கு இந்த பத்து ரூபாயினால் கிடைக்குது நளினி.... சொல்லு... நான் கொடுத்தது தப்பா?" - என்று திரும்பி நளினியை பார்த்தான்.
நளினி ஜன்னல் வழியாக, கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கும் பிளாட்பார்மை கஷ்டப்பட்டு பார்த்து கொண்டிருந்தாள். சிறுவன், பெஞ்சில் தன் தங்கை அருகில் அமர்ந்து தன் இரு கால்சட்டை பாக்கெட்டுகளிலும் இருந்த நா
bala
No comments:
Post a Comment